11 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்

விழுப்புரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் கடந்த 11 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. அதனை பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
11 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
Published on

விழுப்புரம் 25-வது வார்டில் கமலா கண்ணப்பன் நகர், கோவிந்தசாமி நகர், பாலசுப்ரமணியன் நகர், மற்றும் நடராஜர் லேஅவுட் என பல்வேறு வீதிகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் சமுதாயகூடம் கட்டுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கினார். இதையடுத்து சமுதாய கூடம் கட்டப்பட்டு கடந்த 4- 12 -2011 அன்று அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறக்கப்பட்டது. ஆனால் திறந்த நாள் முதல் இன்று வரை அந்த சமுதாயகூடம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. தற்போது இப்பகுதி சுகாதார சீர்கேடு மிகுந்து நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேரும் சகதியமாக உள்ளது. காட்சி பொருளாக இருக்கும் சமுதாயக்கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடவடிக்கை

தற்போதைய கலெக்டர் மோகன் சமுதாய கூடத்தை உடனடியாக திறக்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. கலெக்டர் உத்தரவிட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் என்ன காரணத்தினால் சமுதாயக் கூடம் திறக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆதலால் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சமுதாயகூடத்தை திறந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com