காணை அருகேஇரு தரப்பினரிடையே மோதல்14 பேர் மீது வழக்கு

காணை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காணை அருகேஇரு தரப்பினரிடையே மோதல்14 பேர் மீது வழக்கு
Published on

காணை,

கண்டாச்சிபுரம் தாலுகா குயவன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 46). இவர் தனது நண்பர்களுடன் காணை அடுத்த அருளவாடி தென்பெண்ணையாற்று பகுதியில் குளிக்க சென்றுள்ளார். பின்னர் அங்கு அவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அய்யனார் தரப்பினரை பார்த்து அருளவாடி காலனியை சேர்ந்த சத்யராஜ் தரப்பினர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனை அய்யனார் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் அய்யனாரின் நண்பர்கள் எத்திராஜ், விமல்ராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அய்யனார் அளித்த புகாரின்பேரில் அருளவாடி காலனியை சேர்ந்த சத்யராஜ், நவீன், பாபு, பாண்டியன் ஆகியோர் மீதும், அதேபோல் சத்யராஜ் அளித்த புகாரின்பேரில் குயவன்காடுவெட்டியை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com