காசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
காசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மாவட்ட காசநோய் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் காசநோய் இல்லாத திருவள்ளூர் மாவட்டம் 2025 என்ற இலக்கினை அடைவதற்கான பங்களிப்பு மற்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் செல்வகுமார், துணை இயக்குனர்கள் ஜவகர்லால், செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலந்தாய்வு கூட்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக திருவள்ளூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி மாவட்ட காசநோய் திட்டம் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com