திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற வழக்கில் கள்ளக்காதலன் கைது

திருவள்ளூர் அருகே பச்சிளங்குழந்தையை பள்ளத்தில் போட்டு கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற வழக்கில் கள்ளக்காதலன் கைது
Published on

திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே உள்ள பள்ளத்தில் கடந்த 1-ந்தேதி பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை கிடப்படதாக பொதுமக்கள் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும், திருப்பாச்சூர் கோட்டை காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சக்திவேல் (வயது 24) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அதனால் கர்ப்பமான அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை சுடுகாடு அருகில் உள்ள பள்ளத்தில் போட்டு சக்திவேல் கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று சக்திவேலை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com