கிணற்றில் விழுந்த மாடு, ஆடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு, ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த மாடு, ஆடு உயிருடன் மீட்பு
Published on

கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி. இவரது மாடு அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இது குறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் கொங்கரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சகுந்தலா என்பவரது ஆடு 50 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் அந்த ஆட்டை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com