பூவந்தி அருகே சரக்கு வாகனம் மோதி பசு சாவு

பூவந்தி அருகே சரக்கு வாகனம் மோதி பசு உயிரிழந்தது
பூவந்தி அருகே சரக்கு வாகனம் மோதி பசு சாவு
Published on

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகம் சொக்கையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அக்னி (வயது 47). சம்பவத்தன்று இவர் இரவு சாலையோரம் தனது பசுமாட்டை ஓட்டி வந்துள்ளார். அந்த சமயம் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு சென்ற சரக்கு வாகனம் சொக்கையம்பட்டி விலக்கு அருகே வந்த போது பசு மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் வேன் டிரைவர் திருச்செல்வம்(58) காயமடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்னி கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com