மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்தது

சென்னை முகப்பேரில் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.
மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்தது
Published on

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 4-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் பெட்டி உள்ளது. நேற்று காலை அதன் அருகில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, திடீரென மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக செத்தது.

அந்த மின்சார பெட்டியில் வயர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி இருப்பது குறித்து பலமுறை தகவல் கொடுத்தும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com