தென்னை மரம் விழுந்து பசு சாவு

தென்னை மரம் விழுந்து பசு உயிரிழந்தது.
தென்னை மரம் விழுந்து பசு சாவு
Published on

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்தாவுத் மனைவி மதினாபீவி. இவர் வழக்கம் போல் தனது கால்நடைகளை வீட்டின் அருகே உள்ள ஒரு தென்னைமர தோப்பில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். நேற்று பலத்த காற்று வீசியதில் அங்கிருந்த ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மரம் அகற்றப்பட்டு இறந்துபோன பசுவின் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com