கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை
கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை
Published on

ஈரேடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரேடு, சேலம், திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 400 பசுமாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள். நேற்று கூடிய சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com