கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
Published on

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளிமலையை சேர்ந்தவர் ராஜா. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மாடுகளை அருகே உள்ள வயலில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். சிறிது நேரத்தில் மாட்டின் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது அங்குள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று தவறி விழுந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com