அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Published on

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கேவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாசனம் செய்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

வாட்டி வதைக்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொது மற்றும் கட்டண வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலை சுற்றி பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com