அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும் இன்றுடன் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவடைவதால் பல்வேறு பகுதிகளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருந்தது.

மேலும் கோவிலில் பக்தர்களுக்கு மோ வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com