எப்படி வெள்ளையாக பிறந்தது?.. பெண் குழந்தையின் நிறத்தை கூறி கொலை செய்த கொடூரத் தந்தை


எப்படி வெள்ளையாக பிறந்தது?.. பெண் குழந்தையின் நிறத்தை கூறி கொலை செய்த கொடூரத் தந்தை
x

3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மண்ணடியில் மனைவி மீதான சந்தேகத்தில் 3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

'கறுப்பான நமக்கு எப்படி வெள்ளை நிறத்தில் குழந்தை பிறந்தது..?' என மனைவியை கொடுமை செய்து வந்ததாகவும், பின் குழந்தையை கொலை செய்ததாகவும் விசாரணையின்போது தந்தை அக்ரம் ஜாவித் (33) போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பெண் குழந்தையை கொலை செய்த ஜாவித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக குழந்தை திடீரென இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டிருந்தது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story