வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை
Published on

பாலத்துறை அருகே மோதுக்காடு பகுதியில் உள்ள புகழூர் வாய்க்காலில் இருந்து பள்ள வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரின் மூலம் மோதுகாடு, தவுட்டுப்பாளையம், நன்செய்புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். பள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாததால் இடு பொருட்களையும், விளை பொருட்களையும் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com