

சிவகிரி:
சிவகிரி அருகே தாண்டாம் பாளையம் பகுதியில் உள்ள செங்காளிகாட்டு புதுர் ஊஞ்ச காட்டுவலசு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மர்ம விலங்கு சுற்றித் திரிவதாக பொது மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது,
இந்நிலையில் இன்று காலை செங்காளிகாட்டுபுதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அரை அடி உயரமுள்ள மர்ம விலங்கை நாய் ஒன்று கடித்து குதறியதில் இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுத்தை குட்டியாக இருக்குமா என்று பயந்தவாறு அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தை குட்டி இல்லை என தெரியவந்தது.
மேலும் இது என்ன விலங்கு என்று தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.