

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், காமராஜபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களிடம் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண்கள் பயத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பெண்களிடம் அத்துமீறிய போதை இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போதும் இளைஞர் தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், அவரை சரமாரியாகத் தாக்கினார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் அஜித் என்பது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.