மினிவேன் மோதி விவசாயி, பசுமாடு சாவு

கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.
மினிவேன் மோதி விவசாயி, பசுமாடு சாவு
Published on

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.

மினிவேன் மோதியது

கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம் காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேந்தவர் முனுசாமி (வயது 68), விவசாயி.

இந்த நிலையில் இன்று காலை 6.20 மணி அளவில் முனுசாமி தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்துக்கு ஓட்டி சென்றார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி அய்யம்பாளையம் காந்திநகர் சி.சி. ரோடு செல்லும் சாலையில் மினிவேன் வந்தது. திடீரென மினிவேன் முனுசாமி மற்றும் பசுமாடு மீது மோதியது.

விவசாயி சாவு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.

விபத்து ஏற்படுத்திய மினிவேன் நிற்காமல் சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிவேன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com