மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி கார் மோதி பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி கார் மோதி பலியானார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி கார் மோதி பலி
Published on

கலவை

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி கார் மேதி பலியானார்.

கலவையில் உள்ள பள்ள காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 64). நேற்று மடுவங்கரை பகுதிக்கு வசன்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஆற்காடு நோக்கி அதிவேகமாக சென்ற கார் பார்த்திபன் மீது மோதியதில் அவர் மோட்டார்சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது பார்த்திபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து கலவை போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் மகன் ரவி புகார் அளித்தார். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com