பண்ருட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

பண்ருட்டி அருகே வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
Published on

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 65), விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் அறுவடை செய்த பலாப்பழங்களை மோட்டார் சைக்கிளில் வைத்து ஏற்றிக்கொண்டு பண்ருட்டிக்கு விற்பனை செய்ய புறப்பட்டார். பணிக்கன்குப்பம பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று, ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து காடாம்புலியூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com