

ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 45). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றார்.
மகாராஜன் நேற்று இரவு தனது வயல்வெளியில் பகுதியில் தூங்கி உள்ளார்.
பின்னர் நள்ளிரவில் எழுந்த மகாராஜன் சிறுநீர் கழிப்பதற்காக மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த மகாராஜன் கால் தவறி அருகே உள்ள கிணற்றிக்குள் விழுந்துள்ளார்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த மகாராஜன் தன்னை காப்பாற் கோரி சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் தத்தளித்த மகாராஜனை காப்பாற்ற முயன்றனர் . ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கிடந்த மகாராஜனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.
கிணற்றுக்குள் விழுந்ததில் காயம் அடைந்த மகாராஜனை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து அறிந்த உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.