காட்டுப்பன்றி இறைச்சியை விற்றவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சியை விற்றவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காட்டுப்பன்றி இறைச்சியை விற்றவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
Published on

காட்டுப்பன்றி இறைச்சியை விற்றவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கண்ணமட காப்புக் காட்டு பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வன சரக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச் சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் கண்ணமட காப்புக்காட்டு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த லியோ பெலிக்ஸ் என்பவர் காட்டு பன்றி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து காட்டு பன்றி இறைச்சியை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com