கோபாலபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தால் பரபரப்பு

கோபாலபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபாலபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தால் பரபரப்பு
Published on

சென்னை கோபாலபுரம் கான்ரான் சுமித் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரி கட்டிடம் மொத்தம் 4 மாடிகளை கொண்டது. ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதுபற்றிய தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் சிக்கியிருந்த 5 நோயாளிகளையும், ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள நர்சுகள் ஓய்வெடுக்கும் அறையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com