குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து

குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து
Published on

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் உள்ளது. நேற்று காலை அங்குள்ள ஒரு துணிக்கடையின் மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், துணிக்கடையின் மாடிக்கு ஏணி போட்டு ஏறி சென்று தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் மாடியில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com