மதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து

மதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு எந்திரங்கள் சேதமடைந்தன.
மதுராந்தகம் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. 200 டன் எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்கும் மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப்பொருட்களும் தீப்பற்றி எரிந்தன. கன்டெய்னர் லாரி, மறுசுழற்சி செய்ய பயன்படுத்தப்படும் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில், சுற்று வட்டார பகுதி கிராமங்களான புதுப்பட்டு, சாத்தமை, மலைப்பாளையம், அன்டவாக்கம், வேடவாக்கம், வேடந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீயை கட்டுப்படுத்த மதுராந்தகம், அச்சரப்பாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com