கோவில்பட்டியில்தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து

கோவில்பட்டியில்தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டியில்தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து
Published on

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெரு அருகிலுள்ள சாஸ்திரி நகரில், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்த அய்யாசாமி மனைவி நர்மதா (வயது 55) என்பவர் தீப்பெட்டி தெழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், இவ்விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சி, மருந்து முக்கும் எந்திரம் மற்றும் பத்து மூட்டை மருந்து முக்கிய தீக்குச்சிகள் தீயில் எரிந்து நாசமாயின.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com