திருவனந்தபுரம் சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு

172 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

பெங்களூருவில் இருந்து மாலை 4:45 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மேற்குவங்காள கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் உட்பட 172 பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது திருவனந்தபுரத்தில் தரையிரங்காமல் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியாததால் மதுரை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com