திருச்சி-கோலாலம்பூர் இடையே ஒரு விமான சேவை ரத்து

நிர்வாக காரணங்களுக்காக ஒரு விமான சேவையை குறைத்துக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
திருச்சி-கோலாலம்பூர் இடையே ஒரு விமான சேவை ரத்து
Published on

திருச்சி,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமான நிறுவனம் தினமும் விமானங்களை இயக்கி வருகிறது. நாளொன்றுக்கு 3 சேவைகளை அளித்து வரும் நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒரு விமான சேவையை குறைத்துக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இத்தகைய செயல்முறையை அந்த நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி கோலாலம்பூ ரில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 8.55 மணிக்கு வந்து செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திருச்சி வந்து செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விமான தட்டுப்பாட்டால் இம்மாதம் முழுவதும் தேவைக்கு ஏற்ப தினசரி ஒரு விமான சேவை ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com