சென்னை மெரினாவில் நிறுத்தப்பட்டு உள்ள மிதவை கப்பல்

மேற்கு வங்காளத்தில் ஹல்தியா நகரில் உள்ள தன்னுடைய சொந்த துறைமுகத்திற்கு அது சென்று கொண்டிருக்கிறது.

சென்னை மெரினாவில் நிறுத்தப்பட்டு உள்ள மிதவை கப்பல்
Published on: 

சென்னை

மேற்கு வங்காளம் நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினாவில் மிதவை கப்பல் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான மிதவை கப்பல் ஒன்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளது. இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சமீபத்தில் கோவாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னையில் ஓய்வு

மேற்கு வங்காளத்தில் ஹல்தியா நகரில் உள்ள தன்னுடைய சொந்த துறைமுகத்திற்கு அது சென்று கொண்டிருக்கிறது. வழியில் ஓய்வுக்காக, சென்னையில் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஹல்தியா நோக்கிய அதன் பயணம் தொடரும்.

கடலோர கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், பேரிடர் மேலாண்மை போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இந்த மிதவை கப்பல், நீரின் மீதும், சேறு போன்ற பகுதிகளிலும் கூட பயணிக்கும் திறன் பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com