

கம்மாபுரம்,
இளம்பெண் தற்கொலை
விருத்தாசலம் அருகே கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி சவுமியா (வயது 24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமார் ஆந்திராவில் தங்கி, அங்குள்ள அரிசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதலன் கைது
விசாரணையில், சவுமியாவுக்கும் அதேஊரை சேர்ந்த அறிவழகன் மகன் சக்திவேல்(25) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பற்றி தெரிந்ததும் சதீஷ்குமாரும், உறவினர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அறிவுரை கூறியுள்ளனர்.
எனவே சவுமியா, சக்திவேலிடம் நீதான் என்னை வைத்து காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சக்திவேல் மறுத்துவிட்டதால், சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சவுமியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.