வேடசந்தூர் அருகே விபத்தில் விவசாயி பலி

வேடசந்தூர் அருகே விபத்தில் விவசாயி பலியானார்.
வேடசந்தூர் அருகே விபத்தில் விவசாயி பலி
Published on

வேடசந்தூர் அருகே உள்ள வேலாயுதகவுண்டனூரை சேர்ந்தவர் சின்னு (வயது 76). விவசாயி. இவர் சம்பவத்தன்று கோவிலூரில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வேலாயுதகவுண்டனூருக்கு தனது மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

திண்டுக்கல்-கரூர் சாலையில் சுப்பிரமணியபிள்ளையூர் அருகே அவர் வந்தபோது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க சின்னு தனது மொபட்டை திருப்பினார். அப்போது நிலை தடுமாறி மொபட்டில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com