மதுராந்தகம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது; சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

மதுராந்தகம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால் சென்னையில் இருந்து சென்ற ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
மதுராந்தகம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது; சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு-கரசங்கால் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் கான்கிரீட் கட்டைகளை மாற்றும் பணி கடந்த 10 நாட்களுக்குமேல் நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஊழியர்கள் இரவுபகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை செங்கல்பட்டில் இருந்து கான்கிரீட் கட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று மேல்மருவத்தூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

அப்போது திடீரென அந்த ரெயில் தடம் புரண்டது. இதனால் அதில் இருந்த 200-க்கும் மேற்பட்ட கான்கிரீட் கட்டைகள் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தன.

நடுவழியில் ரெயில்கள்நிறுத்தம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சரக்கு ரெயில் டிரைவர் உடனே ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் விரைந்து வந்து கிரைன் எந்திரங்கள் மூலமாக ரெயிலில் இருந்து கான்கிரீட் கட்டைகளையும், சரக்கு ரெயிலில் இருந்த கட்டைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி, சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களும், வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அனைத்து கட்டைகளும் அகற்றப்பட்ட பின்னர், தடம் புரண்ட ரெயில் சரி செய்யப்பட்டது.

2 மணி நேரம் தாமதம்

இதன் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டன.

2 மணி நேரமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com