சிவகங்கை: பைக் திருட முயன்ற நபரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த கும்பல்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை: பைக் திருட முயன்ற நபரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த கும்பல்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் பைக்கை திருட முயன்ற நபரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞரை, நேற்றிரவு கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளது.

விவேக்கின் நண்பரையும் அக்கும்பல் தாக்கிய நிலையில், காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்கும்பலை தேடி வருகின்றனர்.

கொலையைக் கண்டித்து இன்று காலை மதுரை - ராமநாதபுரம் சாலையில் விவேக்கின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com