நடுவீரப்பட்டில்தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு

நடுவீரப்பட்டில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
நடுவீரப்பட்டில்தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு
Published on

நடுவீரப்பட்டு, 

கடலூர் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடுவீரப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நுற்றாண்டு விழா தொடங்குவதற்கு முன்பு தி.மு.க.வில் ஒரு கோடி பேரை இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் நமது தொகுதியில் புதிதாக 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசின் சாதனையை விளக்க வேண்டும். மேலும் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி, அரசு பல்வேறு சாதனைகளை புரிந்தும் பல்வேறு புதிய திட்டங்களை மக்களுக்கு அளித்தும் அவர்களது வாழ்க்கை சிறப்பு பெற இந்த அரசு செயல்பட்டு வருவதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர்கள் சாரங்கபாணி, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக நிர்வாகி பெரு நற்கிள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி சண்முகம் ஆகியோரும் பேசினர். இதில் துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி, சிவபெருமாள், பொருளாளர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com