

சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் திடீரென ராட்சச சுழல் காற்று வீசியது. மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென சுழல் காற்று வீசியதுடன், காற்றுடன் மணலும் வானுயர எழுந்தது. அத்துடன், அங்கிருந்த கடைகளையும் சிறிது சேதப்படுத்தியது.
இந்த சுழல் காற்றால் யாருக்கும் நல்வாய்ப்பாக காயம் எதுவும் ஏற்படவில்லை. மெரினா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று, அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.