தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நல்ல தொடக்கம் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நல்ல தொடக்கம் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
Published on

காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: நமது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும்,தமிழ்நாட்டிற்கென்று ஒரு பண்பாடும்,கலாச்சாரமும் உள்ளது. அப்படிப்பட்ட தமிழ் மரபை உயர்த்திப் பிடித்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகள்!

ஏழு ஆண்டுகாலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் திமுக வின் தலைவர் ,முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவேன். மிகச் சிறந்த மனிதர், ஜனநாயகத் தன்மை உள்ளவர்,

அதிகாரத்தில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி அன்போடு பழகக்கூடியவர். இந்தச் சந்திப்பிற்கு முழுக்கத் தகுதியானவர். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். அரசியலில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பரஸ்பரம் மரியாதையும்,அன்பும் அவசியம் . அதுவே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும்” என்று பதிவிட்டுள்ளர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com