ஆடு திருடியவருக்கு அரசுப் பதவியா? - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

குற்றப் பின்னணி கொண்டவர்களைப் பதவியில் அமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 நயினார் நாகேந்திரன்
Published on

திருப்பத்தூர்,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வாணியம்பாடி அருகே புதூர் கிராமத்தில் ஆடு வளர்த்துத் தன் பிழைப்பை நடத்தி வரும் 65 வயது ஏழைப் பெண்மணியின் வாழ்வாதாரமான ஆட்டைத் திருடி, காரில் ஏற்றிச் சென்ற வழக்கில் சிசிடிவி (CCTV) ஆதாரங்களுடன் சிக்கிய வழக்கறிஞர் ஏ. ஷேக் சுல்தானை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசு தற்போது திருப்பத்தூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கடும் நடவடிக்கை

அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் லஞ்சத்தின் அடிப்படையில் நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தச் சம்பவம் அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, முதல்-அமைச்சர் விஜய் இந்த முறைகேடான நியமனத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீதும், குற்றப் பின்னணி கொண்டவர்களைப் பதவியில் அமர்த்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com