ஊழல் பட்டம் தந்தவரை வைத்து முப்பெரும் விழா - அண்ணாமலை விமர்சனம்

செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்-அமைச்சர் இப்போது பாராட்டுகிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னை மணலியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜக பல புதிய மாநிலங்களில் வளர்ந்து வருகிறது. அடுத்து பீகாரிலும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் எத்தனை மாநிலங்களில் உள்ளது. திமுகவுக்கு எடுபிடியாகிவிட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தங்களை எடுபிடி கட்சி என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
சாராயம் விற்ற காசில் தான் திமுக முப்பெரும் விழா கரூரில் நடந்துள்ளது. மண் குதிரையை நம்பி காவிரியை நோக்கி புறப்பட்டுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன ஸ்டாலின் இன்று அவரை பாராட்டுகிறார். ஊழல் பட்டம் தரப்பட்ட செந்தில் பாலாஜியை வைத்து திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்த 256 திட்டங்களை திரும்பப்பெறுகிறது திமுக அரசு.
விஜய்க்கு வரும் கூட்டம் அமைதியாக வந்து சென்றால் சந்தோஷம், இதில் விஜய், அரசுக்கு பொறுப்பு உள்ளது. என்.டி.ஏ.வில் இருந்து வெளியேறிய தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். பன்னீர் செல்வம், தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்வார்கள்.ஒரு கூட்டணியில் எவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சந்தோஷம்.
மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காத நான் கணக்கு காட்ட வேண்டியுள்ளது. என் சொந்த சம்பாயத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது.அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என்று பழனிசாமி கூறுவது உண்மை. இதை வரவேற்கிறேன். முதல்-அமைச்சர் வேட்பாளர் பழனிசாமிதான், அதற்காக உழைப்போம், எல்லா முயற்சிகளை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






