செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு

வேதாரண்யத்துக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்துக்கு வந்த சஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு மதுரையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜாதி ஓட்டம் தொடங்கியது.

இந்த ஜோதி ஓட்டம் நேற்று நாகை மாவட்டத்திற்கு வந்தது. அப்போது இந்த ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த ஜோதி ஓட்டம் தோப்புத்துறை, செம்போடை, தலைஞாயிறு, திருக்குவளை, மேலப்பிடாகை, திருப்பூண்டி, வேளாங்கண்ணி சர்ச், புத்தூர் அண்ணாசிலை, கோட்டைவாசல், நாகை பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், நாகூர் தர்கா வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வந்தது.

வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் சஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி மாணவர்களோடு சேர்ந்து ஓடி வந்து கலெக்டரிடம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், ஷகிலா மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர். பெரியசாமி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர்.புகழேந்தி துணை தலைவர் மங்களநாயகி நகராட்சி ஆணையர் ஹேமலதா,தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு-வேளாங்கண்ணி

தலைஞாயிறு பேரூராட்சிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சிலர் ஒலிம்பியாட் போட்டி சின்னமான தம்பி வேடமிட்டு வரவேற்பு அளித்தனர்.இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், துணைத்தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணிக்கு வந்த ஜோதி ஓட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், செயல் அலுவலர் பொன்னுசாமி, கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com