வாலாஜா
புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜா நகரில் உள்ள சவுக்கார் தெருவை சேர்ந்த குடாராம் மகன் பரத் (வயது 27). இவர் வாலாஜா நெல்லிசெட்டி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் கடையில் சோதனை நடத்தி 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பரத்தை கைது செய்தனர்.