பாபநாசம் மலைச்சாலையில் குட்டிகளுடன் உலா வந்த யானை கூட்டம்!

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாபநாசம் மலைச்சாலையில் குட்டிகளுடன் உலா வந்த யானை கூட்டம்!
Published on: 

பாபநாசம்,

பாபநாசம் மலைச்சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன.

யானை கூட்டம்

பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் பாபநாசம் கீழணையில் இருந்து முண்டந்துறை செல்லும் மலை சாலையில் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.

இவை மாலை வேளையில் சாலையோரமாக சிறிது தூரம் நடந்து சென்று சாலையை கடந்து சென்ற யானை கூட்டத்தை அவ்வழியே சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவ்வப்போது இந்த சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படும் நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதால் காரையார் சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனமுடன் செல்ல அறிவுத்தப்பட்டுள்ளனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com