பரவனாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம்

பரவனாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டிட பணியை நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்.
பரவனாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம்
Published on

கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, கடலூர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக திருவண்ணாமலை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமையிலான உள்தணிக்கை குழுவினர் கடலூர் வந்தனர்.

தொடர்ந்து இந்த குழுவினர் கடலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கி உதவியுடன் 2021-2022-ல் செயல்படுத்தப்படுகிற சிறுபாலையூர் - மணிக்கொல்லை சாலையில் பரவனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி மற்றும் அணுகு சாலையான 1.3 கி.மீ. வரை தரம் உயர்த்துதல் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். தொடர்ந்து நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிற பல்வேறு சாலைப் பணிகள், பாலங்கள் அமைக்கும் பணியையும் இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த தணிக்கை குழுவினர் தங்களுடைய ஆய்வை முடித்துக் கொண்டு, அதன் அறிக்கையை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் போது கடலூர் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட பொறியாளார் வெள்ளிவேல், வேலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளார் தனசேகரன், கடலூர் உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி, உளுந்தூர்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com