புதுக்கடை அருகே சூறைக்காற்றில் மரம் விழுந்து வீடு சேதம்

புதுக்கடை அருகே சூறைக்காற்றில் மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது.
புதுக்கடை அருகே சூறைக்காற்றில் மரம் விழுந்து வீடு சேதம்
Published on

புதுக்கடை:

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் புதுக்கடை அருகே பொன்னன்விளையை சேர்ந்த நடராஜன் என்பவர் வீட்டின் அருகில் நின்ற ஒரு மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த நடராஜனின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் மரம் விழுந்ததில் அவர்களின் ஓட்டு வீடு சேதம் அடைந்தது. சேதமடைந்த வீட்டுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---

X

Daily Thanthi
www.dailythanthi.com