வயலில் கிடந்த மனித எலும்புக்கூடு

வயலில் கிடந்த மனித எலும்புக்கூடு கிடந்தது.
வயலில் கிடந்த மனித எலும்புக்கூடு
Published on

முசிறி:

மனித எலும்புகள்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள செவந்தலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ஆவுளி என்பவர், அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோரை விவசாயம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர்கள், வயலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்ததை கண்டு அச்சமடைந்தனர்.

மேலும் இது பற்றி உடனடியாக முசிறி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, கோகிலா, வடிவேலு மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.

கொலை செய்யப்பட்டு...

அப்போது வயலில் மனித எலும்புகள் சிதறிக்கிடந்தன. மலும் மண்டை ஓடும், ஒரு டவுசரும் கிடந்தது. இதையடுத்து அவற்றை சேகரித்து அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக, அவற்றை முசிறி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

மேலும் யாரேனும் கொலை செய்யப்பட்டு உடல் அப்பகுதியில் வீசப்பட்டதா? அல்லது யாரேனும் தற்கொலை செய்து கொண்டார்களா? நீண்ட நாட்களாக உடல் அப்பகுதியில் கிடந்து அழுகியதால் எலும்புக்கூடானதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com