இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்
Published on

ராமநாதபுரம்,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14 மற்றும் 28 ஆம் தேதிகளில் மீன் பிடிக்க சென்ற 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசம் உள்ள 132 படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் நேற்று மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com