ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை
Published on

கள்ளக்குறிச்சியில் கடந்த 2 வாரங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.120-ல் இருந்து ரூ.130 வரைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிக்க தோட்டக்கலைத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.80-க்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உழவர்சந்தையில் உள்ள தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே தக்காளி வழங்கப்படும். எனவே பொதுமக்கள் உழவர் சந்தையில் உள்ள தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையத்தில் தக்காளி வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, உதவி இயக்குநர்கள் முரளி, உமா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com