கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு
Published on

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் மெயின் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்காக ஆழமான கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே ஓடும் சாக்கடை கால்வாயில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு ஆட்டுக்குட்டி விழுந்தது. ஆழமான பகுதியாக இருந்ததால் மேலே வர முடியாமல் தவித்த ஆட்டுக்குட்டியை மீட்க அந்த வரியாக சென்றவர்கள் முயன்றனர். ஆனால் கழிவுநீர் கால்வாய் மூடப்பட்ட நிலையில் இருந்ததால், அதனை மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சாக்கடையின் மேலே இருந்த ஸ்லாப்புகளை அகற்றி சாக்கடைக்குள் இறங்கி அந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். துப்புரவு பணியாளர்களின் இந்த மனிதநேய செயலை அப்பகுதியில் இருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com