சதுரகிரியில் பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சதுரகிரியில் பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
Published on

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலில் இன்று ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு குவிந்தனர்.

பின்னர் காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர். பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com