திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்

திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்
திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்
Published on

ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசை

அமாவாசை நாட்களில் ஆடி மாதம் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இந்த நாட்களில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆறு, புஷ்யமண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

தீர்த்தவாரி

அதனை தாடர்ந்து ஐயாறப்பர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.

இந்த ஆண்டு திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அடுத்தமாதம் 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசை அன்று ஐயாறப்பர் கோவிலில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com