2 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை.. 3-வதாக இளம் பெண்ணுக்கு ஆசைகாட்டிய கல்யாண மன்னன்.. அடுத்து நடந்த சம்பவம்


2 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை.. 3-வதாக இளம் பெண்ணுக்கு ஆசைகாட்டிய கல்யாண மன்னன்.. அடுத்து நடந்த சம்பவம்
x

கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக அந்த நபர் ஆசை காட்டியதாக கூறப்படுகிறது.

சென்னை


சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். 3-வதாக சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் திருமண தகவல் மையம் மூலம் சுரேஷ்குமார் தொடர்பு கொண்டார்.

கணவனை இழந்த அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டினார். அவரது வலையில் விழுந்த அந்த இளம் பெண்ணை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பூங்காவிற்கு இரவில் வரவழைத்தார். பின்னர் அந்த இளம் பெண்ணை அங்குவைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார். அதோடு அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டார்.

பின்னர் அந்தப் பெண்ணை பூங்காவில் தவிக்க விட்டுவிட்டு சுரேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த இளம் பெண் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் மோசடி மன்னன் சுரேஷ்குமாரை கைது செய்தனர். சுரேஷ்குமார் மீது ஏற்கனவே வேறு போலீஸ் நிலையங்களில் இதுபோன்ற பல திருமண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story