நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தேமுதிகவை சாராத மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Published on

சென்னை,

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் ஒன்று தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி சார்பில் தேமுதிக கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதிஷ்-க்கு வழங்கப்பட்டது. இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தபின்பு தேமுதிக கட்சியின் அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த்- உடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தேமுதிகவிலுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களில் எல்.கே. சுதிஷ்-ம் ஒருவராவார். அவர் தேமுதிக கட்சி ஆரம்ப காலம் முதலே கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து தான் இன்று மாநிலங்களவை உறுப்பினராக செல்ல இருக்கிறார்.

முதன்முதலில் தேசியத்திலும் இந்திய அளவில் ஜனநாயகக்கடமை ஆற்ற இருக்கும் சுதிஷ்க்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேமுதிகவை சாராத மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேமுதிகவின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. எப்போதோ மாநிலங்களவை சீட் கிடைத்திருக்க வேண்டும், தற்போது தான் கிடைத்திருக்கிறது.திமுக கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com